இருமடங்காக அதிகரிக்கும் சீன அணுஆயுதங்களின் பலம்! படை வலிமை பெருக்கம்… வெளியான முக்கிய தகவல்!!

501

சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காகப் பெருக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு, தைவானுக்கு அமெரிக்க ஆதரவு ஆகியவற்றால் சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் படைவலிமை, அணு ஆயுதங்களைப் பெருக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதில் சீனா முதன்மையான பகுதிகளில் தனது படை வலிமையை அமெரிக்காவுக்குச் சமமாகவோ, அதைவிட அதிகமாகவோ பெருக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கப்பல் கட்டுதல், ஏவுகணைகள் தயாரித்தல், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல் ஆகியவற்றில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.