இளம் பெண்நீதிபதி தூக்கிட்டு தற்கொலை… அயோத்தியில் பரபரப்பு!!

436

இன்றைய இளைஞர்களுக்கு போராடும் மனவலிமை குறைவாகவே இருந்து வருகிறது. நினைத்து நடக்க வேண்டும். பேசியது பலிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இல்லையெனில் விபரீத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர்.

பள்ளி மாணவ,மாணவிகள், கல்லூரியில்படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லை. உடனே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இந்த செயல் பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் படவானில் உள்ள நீதிபதிகள் காலனியின் முதல் தளத்தில் வசித்து வந்தவர் ஜோத்சனா ராய் (27). படவான் நீதிமன்றத்தில் இளநிலை நீதிபதியாக பணியாற்றினார். இந்நிலையில் இன்று காலை அவர் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். ஆனால், அவர் பணிக்கு வரவில்லை. இதனால், சக நீதிபதிகள் அவரை தொலைபேசியில் அழைத்தனர்.

இதற்கு, பதில் வராததால், அவர்கள் பெண் நீதிபதி வீட்டிற்கு நேரில் சென்றனர். அப்போது, ​​அவரது வீட்டின் படுக்கையறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, ​​பெண் நீதிபதி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அந்த அறையில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராய் கடந்த ஆண்டு ஏப்ரல் 29 முதல் படவான் நகரில் சிவில் நீதிபதியாக (ஜூனியர் பிரிவு) நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் அயோத்தியில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றினார்.

முதற்கட்ட விசாரணையில் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என மூத்த போலீஸ் சூப்பிரண்டு அலோக் பிரியதர்ஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.