சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வரும் பெண் ஒருவர் சிட்லப்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பள்ளிப் பருவத்தில் இருந்து பழகி தனியார் சட்ட கல்லூரி படிக்கும் போதும் இருந்த பழக்கத்தில் சேலையூரில் வசித்து வரும் லியாஸ் தமிழரசன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்
அதனை செல்போன் மூலம் பதிவு செய்து மிரட்டி பணம், நகை பறித்ததாகவும், அதனையே மீண்டும் மீண்டும் காட்டி பாலியல் தொல்லை அளித்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆந்திராவில் வசித்து வரும் மற்றொரு பெண்ணூம் சிட்லபாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இதன் அடிப்படையில் லியாஸ் தமிழரசனை பிடித்தபோது சில நாட்களுக்கு முன் திருமணம் செய்த பெண் ஒருவர் இருந்துள்ளார்.
இதனால் அவரின் செல்போன், லேப்டாப் இவைகளை பறிமுதல் செய்து பரிசோதனை செய்த நிலையில் இதே போல் 10 க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் மீது ஐ.பி.சி 376, 417, 420 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து தாம்பரம் குற்றவியல் நடுவர்-2 முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.