உறவினர்களை பஞ்சாயத்துக்கு அழைத்ததால் விபரீதம்.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

151

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலாஜி, ராமகலா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். பாலாஜி சொந்த ஊரில் சமையல் வேலை செய்கிறார். கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது

இதுகுறித்து ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உறவினர்கள் பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகலாவின் கழுத்தை அறுத்தார். ராமகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது, ​​ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து பாலாஜி அங்கிருந்து தப்பியோடினார்.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.