உல்லாசத்திற்கு இடையூறு கணவனை அடித்து கொன்று இழுத்துச் சென்ற மனைவி!!!

217

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே சிக்கரூர் என்ற கிராமம் உள்ளது. இங்குதான் சாதிக் என்பவர் வசிக்கிறார். அவருக்கு வயது 30. மனைவி பெயர் சல்மா 25 வயது. தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.

இது இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் திருமணத்திற்கு முன்பே ஜாபர் என்பவரை சல்மா காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகும் சல்மா ஜாபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சாதிக் சல்மாவை கண்டித்து இந்த பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சாதிக் சொல்வதை சல்மா கேட்கவில்லை. இதனால் தம்பதி இடையே தகராறு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சல்மாவுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொல்ல முடிவு செய்த சல்மா இதுபற்றி ஜபரிடம் கூறி, அவரும் சாதிக்கை கொல்ல சம்மதித்தார். அதன்படி, சம்பவத்தன்று இரவு, சல்மாவும், ஜாபரும் சேர்ந்து சாதிக்கை கழுத்தை நெரித்து கொன்றனர்.

பின்னர் சாதிக்கை கொடூரமாக தாக்கினர். இதில் சாதிக் துடித்து இறந்தார். அவரை தாறுமாறாக குளியலறைக்கு இழுத்துச் சென்று அவர் உடம்பில் இருந்த ரத்தக் கறைகளை எல்லாம் கழுவினார்.

அதையடுத்து, சல்மா அக்கம் பக்கத்தினரிடம் ஓடி வந்து, சாதிக் குளியலறையில் தவறி விழுந்து விட்டதாக கூறி. சாதிக்கின் குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சாதிக்கின் குடும்பத்தினர் சாதிக்கின் சடலத்தை எடுத்து வந்து கதறி அழுதனர்.


அவர்களும் இறுதிச்சடங்கு செய்து சாதிக்கின் உடலை அடக்கம் செய்தனர். இதை கவனித்த சாதிக்கின் சகோதரர் அப்போதுதான் சாதிக் குளியலறையில் தவறி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து ஹம்சபாவி போலீசில் புகார் செய்தார்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சல்மாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முழு உண்மையையும் ஒப்புக்கொண்டார். உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் ஜாபருடன் சேர்ந்து சாதிக்கை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.