தமிழகத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை தமிழரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகரில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர் நாகராஜ் (43). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். நாகராஜ் பவானிசாகரை அடுத்த எரங்காட்டூரில் பெயின்ட் அடிக்க சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நாகராஜ் உடல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பவானிசாகர் காவல் நிலையத்தில் தனது மகளிடம் நாகராஜ் தவறாக நடந்து கொண்டதாக புகாரளித்தார்.
இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜை பொலிசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நாகராஜ் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.