என் பாய் ஃபிரண்ட் கூட உனக்கென்ன பேச்சு? உறங்கிக்கொண்டு இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

334

புளோரிடா..

புளோரிடாவின் ஒர்லாண்டோ என்னும் பகுதியில் வசித்து வருபவர் பாத்திஹா மர்சான் (வயது 21). இவரது சகோதரியின் பெயர் சய்மா (வயது 20). இவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், தனது காதலர் மற்றும் சகோதரி சய்மா ஆகியோருக்கு இடையே ஒரு பழக்கம் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆன்லைன் மூலம் கேம் விளையாடும் போது, பாத்திஹாவின் காதலர் மற்றும் சய்மா ஆகியோர் அதிக நேரம் செலவழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சய்மாவை தான் நேசிப்பதாகவும் பாத்திஹாவிடம் அவரது காதலர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இதன் காரணமாக, தனது சகோதரி மீது கடும் கோபத்திலும் பாத்திஹா இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஒரு படி மேலே சென்று சகோதரியை கொலை செய்யவும் அவர் முடிவு எடுத்துள்ளார்.

இதற்காக திட்டம் போட்டு வந்த பாத்திஹா, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஆயுதம் ஒன்றையும் வாங்கி தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். மேலும், பாத்திஹா மற்றும் சய்மா ஆகியோர் ஒரே அறையில் தூங்குவார்கள் என்பதால், அதிகாலை வேளையில் பயங்கர முடிவு எடுத்துள்ளார் பாத்திஹா.

வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், சகோதரி சய்மாவை ஆயுதம் கொண்டு தாக்கி உள்ளார் பாத்திஹா. அப்போது கண் விழித்து கொண்ட சய்மா, வேதனையில் கத்தியதாகவும் உதவிக்கு அழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில், சம்பவ இடத்திலேயே சய்மா உயிரிழந்தார்.

தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சய்மாவின் உடலை மீட்டனர். இதன் பின்னர், பாத்திஹாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சகோதரியை கொலை செய்த பின்னர், தானும் விபரீத முடிவு எடுக்க நினைத்திருந்ததாக பாத்திஹா குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலனுடன் அதிகம் நெருங்கி பழகியதன் பெயரில், உடன் பிறந்த சகோதரியே இளம்பெண்ணை கொலை செய்த விஷயம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.