’என்ன கொல்ல பார்க்கிறார்கள்’ அத்துமீறும் முதலாளி குவைத்திலிருந்து கதறியபடி வீடியோ அனுப்பிய பெண்!!

60

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கந்தேபள்ளி யல்லமெல்லி கிராமத்தைச் சேர்ந்த கார குமாரி, ஜக்கம்பேட்டா ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை தனியாக கவனித்து வந்தார். குழந்தைகளை வளர்க்க வருமானம் போதாததால், பாலக்கொல்லுவை சேர்ந்த எம்.சுதாகர் என்ற ஏஜென்டை குமாரி நாடினார்.

இவரது உதவியுடன் குமாரி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டுக்கு வீட்டு வேலை செய்ய சென்றார். குழந்தைகளை தன் தாயின் பராமரிப்பில் விட்டுச் சென்றார்.

ஆனால், குவைத்தில் உள்ள குமாரியின் முதலாளிகள், அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

உணவு தராமல் துஷ்பிரயோகம் செய்ததோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர் தனது உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

கர குமாரி வெளியிட்டுள்ள கண்ணீர் வீடியோவில், “எனக்கு சரியான உணவு தரவில்லை, கொல்ல முயற்சிக்கிறார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள், என் குழந்தைகளிடம் திருப்பி அனுப்புங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த வீடியோ வைரலாக பரவி காக்கிநாடா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார குமாரியை மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் கிராம மக்களும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.