ஊரடங்கிலும் வாயடங்காமல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்கிற பேச்சு தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே லிவிங்டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவர்களது திருமணம் 2020-ல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்த ஜோடி கடந்த ஆண்டில் இருந்தே தொடர்ந்து ஆன்மிகப் பயணத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இ றுதியில் அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார்கள். அடுத்தடுத்து சில கோயில்களுக்கும் சென்று வழிபட ப்ளான் போட்டிருந்தனர். அதற்குள் கொரோனா வந்துவிட்டது.
நயன்தாரா கி றிஸ்துவ மதத்தைச் சே ர்ந்தவராக இருந்தாலும் இந்து கோயில்களுக்கு சென்று வருகிறார். இ ந்து வழக்கப்படி விரதமிருக்கிறார். இ ந்து க டவுள்களை வ ணங்குகிறார். அதேபோல் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை அவருக்குண்டு. அவரது ஆஸ்தான ஜோதிடர், நயனுக்கு திருமண தோஷம் இருப்பதாக கூறி காளஹஸ்தி சென்று வழிபடச் சொல்லி இருக்கார்.
அதன்பிறகே விக்னேஷ் சிவனோடு அங்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தார். அடுத்து காளஹஸ்தி, பகவதி அம்மன், திருச்செந்தூர் என நயன் – விக்னேஷ் ஜோடியை கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் சென்று வரச் சொல்லி இருக்கிறார் அந்த ஜோதிடர்.
‘ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டிப் பிரார்த்திக்கும் திருநாகேஸ்வரம் கோயிலுக்குப் போய் வந்ததும் திருமணத்த டை முற்றிலும் வி லகிடும். அங்கு சென்று வந்தபிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறியிருக்கிறார் அந்த ஜோதிடர். ஆனால் அங்கு கிளம்புவதற்குள் கொரோனா வந்து ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது. ஜூலையோடு ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தார் நயன். ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட கலக்கமாகி விட்டார் நயன். ஏக்கத்தில் தவிக்கிறார் விக்னேஷ் சிவன்.