ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா மரண வாக்குமூலத்தில் ட்விஸ்ட்.. சிக்கிய கடிதத்தின் சீக்ரெட் பின்னணி!!

191

மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவெடுத்த நிலையில், அவருடைய கடிதம் தற்போது சிக்கியுள்ளது.

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடு ஆகிய சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது 14 வயது மகனை பள்ளிக்குச் செல்லும் போது ஆம்னிவேனில் பின் தொடர்ந்து வந்த கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுநரோடு சேர்த்து கடத்திச் சென்றது.

சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் கேட்டு கும்பல் மிரட்டல் விடுக்க, இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ ஆதாரங்களுடன் சிறுவனின் தாய் ராஜலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். இந்த வழக்கை பதிந்து கடத்தல் கும்பலை தேடி வந்த போலீசார் சிறுவனை சில மணி நேரங்களில் மீட்டனர்.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவலர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிஸ் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.