ஒரே கலர் சட்டை… ஒரே மாதிரியான வாசகம்… ஒரே மரத்தில் ஒரே கயிற்றில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை!!

254

கர்நாடகா மாநிலம், கட்டாக் மாவட்டம், கஜேந்திரகர் தாலுகாவில் நரேகல் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பெரும்பாலானோர் விவசாயிகள்.. காலை கிராம மக்கள் வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு வந்தனர். அப்போது, வயல் அருகே உள்ள புளிய மரத்தில் ஆணும், பெண்ணும் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறியடித்து ஓடினர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் இருவரும் கட்டாக் மாவட்டம் நரேகல் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அந்த பெண்ணின் பெயர் லலிதா, 21 வயது அந்த ஆணின் பெயர் அப்பண்ணா கோரக்கி வயது 28. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.. இவர்களது காதல் விவகாரம் வீட்டிலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. ஆனால் இரு வீட்டாரும் காதலை ஏற்கவில்லை.

குறிப்பாக லலிதா வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடனடியாக கடந்த 4ம் தேதி லலிதாவுக்கு கட்டாய திருமணம் செய்தனர். அவசர அவசரமாக கிடைத்த மாப்பிள்ளையுடன், குடும்பத்தினரின் அழுத்தத்தால் லலிதா திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறார்கள்.


இருந்தாலும் லலிதாவால் தன் காதலன் அப்பண்ணாவை மறக்க முடியவில்லை. அதேபோல லலிதாவை அப்பண்ணாவும் மறக்க முடியவில்லை. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். வயல் வெளிக்கு அருகில் உள்ள இடத்தையும் தேர்வு செய்தனர்.. இருவரும் ஒரே நிறத்தில் சட்டை அணிந்திருந்தனர்.

இரண்டு சட்டைகளிலும் I LOVE YOU என அச்சிடப்பட்டிருந்தது. அந்த சட்டையை அணிந்த நிலையில் இருவரும் ஒரே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.