கணவனுக்கு தெரியாமல் 2-வது மனைவி ரகசியமாக செய்து வந்த பாலியல் தொழில்! கொள்ளை சம்பவ விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

340

தமிழகத்தில் கணவர் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து பொலிசில் புகார் கொடுக்க, இறுதியில் மனைவி வீட்டின் மொட்டை மாடியில் ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்ததது அம்பலமாகியுள்ளது.

சென்னை அடுத்து செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். கடந்த 5-ஆம் திகதி திடீரென்று 10 பேர் கொண்ட கும்பல் இவரின் வீட்டின் உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையடித்து சென்றனர்.

இதனால் குமார், அங்கிருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்தனர். இதில் 10 பேர் 5 இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், செங்குன்றத்தில் புறப்பட்ட இருசக்கர வாகனங்கள் தண்டையார்பேட்டை வரை சென்றது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான ரகு தலைமையிலான கும்பல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை பொலிசார் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த ரகு அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். கைதானவர்களிடம் குமார் வீட்டில் நகை இருப்பது எப்படி தெரியும், குமார் வீட்டை தேர்ந்தெடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன் என விசாரித்த போது, குமாரின் இரண்டாவது மனைவி, கணவருக்கு தெரியாமல் வீட்டில் வைத்தே ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்ததுள்ளது தெரியவந்தது.

அதாவது, லாரி ஓட்டுநரான குமார் வெளியூர் செல்லும் நேரத்தில் வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வர வைத்து, வீட்டின் மாடியில் உள்ள கூரை வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இதற்காக சில பெண்களை உறவினர்கள் போல் வீட்டுக்கு அழைத்து, அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக செய்து வந்துள்ளார். அங்கு தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள அடிக்கடி சென்று வந்துள்ளார் ரகு. அப்போது, குமாரின் மனைவி பாலியல் தொழில் செய்து அதிக அளவில் பணம் வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனால் கூட்டாளிகளுடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். குமாரின் மனைவி சட்டவிரோத செயலில் ஈடுபடுவதால், பொலிசில் புகார் அளிக்க மாட்டார் என நினைத்து செய்ததாகவும், இந்த விவகாரம் எதுவும் தெரியாத குமார் பொலிசில் புகார் அளித்ததால் தாங்கள் சிக்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ரகு உள்ளிட்டவர்கள் குமார் வீட்டில் கொள்ளையடித்த ஏழரை சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 3 செல்போன்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களை பொலிசார் பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.