கணவர் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவி எடுத்த முடிவால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

347

சரண்யா…

திருச்சியில் கணவர் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் ஐயப்ப நகர் தாயுமானவர் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், பிரஜித், ரெனிஸ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே தனது குடும்பத்துடன் சொந்த வீடான கே.கே.நகருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லோகேஸ்வரன் வந்துள்ளார்.


அப்போது அவரின் இளைய மகன் ரெனிஸ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாலை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.

வீட்டிற்கு வந்த உடன் மகனின் உடல் நல கோளாறுக்கு காரணம் குறித்து கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் லோகேஸ்வரன் மனைவி சரண்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா படுக்கை அறைக்குள் சென்றார்.

சில மணி நேரம் கழித்து லோகேஸ்வரன் அறைக்கதவை திறந்து பார்த்தபோது சரண்யா சேலையில் துாக்கி’ட்டு கொண்டுள்ளதை கண்டு அ.தி.ர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கூப்பிட்டு மனைவி சரண்யாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தொிவித்தனர்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.