கண் எதிரே கிணற்றில் குதித்த காதலி… காப்பாற்றாமல் தப்பிச் சென்ற கள்ளக்காதலன்… கள்ளக்காதல் விபரீதம்!!

286

பொருந்தா காதல் 30 வயதேயான இளம்பெண்ணின் வாழ்வையே பறித்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது.

30 வயதேயான மதுபிரியா, தன்னுடைய கள்ளக்காதலன் தொடர்ந்து 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது சோகம் என்றால், கண் எதிரே கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், காப்பாற்றாமல் அப்படியே தப்பி ஓடிச் சென்றவனை என்ன சொல்வது?

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மது பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபிரியா கடந்த 2 வருடங்களுக்கு முன் கணவரைப் பிரிந்து ஆலங்காயம் காமராஜர் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மதுபிரியா நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நிம்மியம்பட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து திடீரென மதுபிரியா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியடைய செய்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற ஆலங்காயம் போலீசார், வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சரத்குமார் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், மதுபிரியா தற்கொலைச் செய்து கொண்ட சம்பவத்தன்று சரத்குமார், மது பிரியாவை வற்புறுத்தி அருகே உள்ள மராட்டிபாளையம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.


இருவரும் அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, சரத்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மதுபிரியாவை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனஉளைச்சலுக்கு ஆளான மது பிரியா, சரத்குமாரின் கண் எதிரிலேயே திடீரென ஓடிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், கண் எதிரே மதுபிரியா கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

மது பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் இது குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்த சரத்குமாரை கைது செய்தனர்.