கண்ணில் வெறிநாய்க்கடி ஊசி… கதறித் துடித்த காதலன்.. காதலியின் கொடூர செயல்!!

208

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் மியாமி மாகாணம் டேட் கவுன்ட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்த்ரா ஜிமினெஸ் . இவர் தன்னுடைய காதலனுடன் கடந்த 8 வருடங்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் அவரது காதலன் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து காதலனிடம் தகராறு செய்தார் சந்த்ரா ஜிமினெஸ். ஆனால் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜிமினெஸ், தங்களின் வளர்ப்பு நாய்க்கு போடுவதற்காக வாங்கி வைத்து இருந்த வெறிநாய்க்கடி ஊசியை எடுத்து காதலனின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அவரது காதலன் உடனே போலீசை தொடர்பு கொண்டுதனக்கு உதவி செய்யும் படி கதறி அழுதார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் படுத்து தூங்கி கொண்டு இருந்த தோழி ஜிமினெஸையும் போலீசார் கைது செய்தனர்.


இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜிமினெஸிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, காதலனை தான் தாக்கவில்லை. அவர் தன்னை தானே குத்திக் காயப்படுத்தி கொண்டார். இந்த தாக்குதல் குற்றச்சாட்டை நான் ஏற்க முடியாது எனவும் ஜிமினெஸ் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஜிமினெசிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.