கனடாவில் குழந்தைக்கு முத்தமிட்டு சென்ற தாய்….நீண்ட நாட்களின் பின்னர் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

346

கனடாவில் தன் குழந்தைக்கு முத்தமிட்டு பாட்டி இடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற தாய் திரும்ப வராததால் தேடி சென்றவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலம்பியா நாட்டை சேர்ந்த 18 வயதான ஜெசிக்கா என்ற இளம்பெண் தன் குழந்தைக்கு முத்தமிட்டு விட்டு தனது பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் பாட்டி பொலிசாரிடம் புகாரளிக்க பதினைந்து நாட்களாக தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. அதன்பிறகு ஜெசிக்காவின் குடும்பத்தை சேர்ந்த ஸ்மித் என்ற பெண் தனது மகள் ஜாக்யூ பிரவுஸ் உடன் பனி சறுக்கு விளையாடும் இடத்திற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜாக்யூ பிரவுஸ்க்கு ஏதோ ஒன்று மனதில் தோன்றியிருக்கிறது. அந்தப் பெண் ஜெசிக்காவிற்கு சகோதரி உறவு முறை கொண்டவருமான ஜாக்யூ பிரவுஸ். அவர் பறவைகள் வானில் வட்டமிட்டு கண்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஜெசிக்காவின் உடல் பிணமாக கிடந்தது. அவர் கடைசியாக வீட்டைவிட்டு சென்ற போது அணிந்து உடையிலேயே இருந்தார்.


மேலும் அவரது தலைமுடி அவரது முகத்தை மறைத்து சட்டை மார்புக்குக் கீழே தள்ளப்பட்டு அந்த பெண்ணை யாராவது தூக்கிக்கொண்டு வந்து போட்டிருந்தால் எப்படி இருக்குமோ? அவ்வாறு அந்த பெண்ணின் உடல் அங்கு கிடந்தது.

இதனைக் கண்ட பிரவுஸ் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யவில்லை. இருப்பினும் பொலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில் கனடாவில் காணாமல் போன பல பெண்களின் வாழ்க்கையை போலவே தனது சகோதரியின் வழக்கும் முடிவடைந்து விடுமோ என்று பிரவுஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு முடிந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக அவர் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.