மீனா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆர்மபித்த மீனா 13 வயதிற்கு பின் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
கிளாமரிலும் குடும்ப பாங்கான ரோலிலும் பட்டையை கிளப்பி வந்த மீனா நெருக்கமான முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார். அப்படி நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கமல் படங்களில் முத்தக்காட்சிகள் இருக்கும் என்று தெரிந்தும் அவ்வை சண்முகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் படப்பிடிப்பிற்கு இரு நாட்களுக்கு முன் தான் படத்தின் உதவி இயக்குனர் முத்தக்காட்சி இருப்பதாக கூறினார்.
இதன்பின் கேரவனில் இதை எப்படி செய்வது என்று பயந்து போய் தன்னுடைய தாயிடம் இது பற்றி கதறி அழுததாகவும் இயக்குனரிடம் சொல்லுங்கள் என்றும் மீனா கூறியிருக்கிறார். அதன்பின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த கமல் ஹாசன், லிப் லாக் காட்சி இலை என்று கூறிய பின் தான் நிம்மதி பெருமூச்சு விட்டதாகவும் மீனா அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.