கருச்சிதைவுக்குப் பின் பிறந்த குழந்தை.. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

169

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியப் பெண்ணொருவர் கருச்சிதைவுக்குப் பின் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க, அந்தச் சிறுவன், தாய்க்கு பெரும் அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தான்.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் லாரா (Laura Mazza) என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை அறியவில்லை. அவர் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக எண்ணியுள்ளார்.

பின்னர் மீண்டும் கர்ப்பம் தரித்த லாரா, ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது ஆகிறது. அவன் பெயர் லூக்கா.

ஒருநாள்,லாரா லூக்காவை குளிக்கவைத்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவன், அம்மா, நான் உங்கள் வயிற்றுக்குள் வாழ்ந்தேன், அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறான்.


அதற்கு லாரா, ஆம் லூக்கா, எனக்குத் தெரியும், முன்பு நீ என் வயிற்றுக்குள் வாழ்ந்தாய், இப்போது நாம் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு லூக்கா, அது இல்லை அம்மா, நான் முன்பு ஒரு முறை உங்கள் வயிற்றில் வாழ்ந்தேன். ஆனால், நான் இறந்துவிட்டேன். நான் உங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். ஆனால் உங்களை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

நான் கூப்பிட்டால் அது உங்களுக்குக் கேட்கவும் இல்லை. எனக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. பிறகு நான் ஒரு ஏஞ்சலாக மாறிவிட்டேன். அப்போதும் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.

ஆகவே, நான் மீண்டும் உங்களிடம் வர விரும்பினேன். அதற்குப் பிறகு உங்கள் வயிற்றுக்குள் மீண்டும் வந்துவிட்டேன். இப்போது திரும்பவும் உங்களுக்கு மகனாக பிறந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறான் லூக்கா.

அவன் சொன்னதைக் கேட்டு தான் அதிர்ந்துபோனதாக தெரிவிக்கும் லாரா, தான் அவனிடம் ஏஞ்சல்கள் குறித்தெல்லாம் பேசியதே கிடையாது. ஆகையால், அவன் கூறியதைக் கேட்டு அழுதுவிட்டேன் என்கிறார். அத்துடன், தனக்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டது கூட இப்போது மகன் சொல்லித்தான் புரியவந்துள்ளது என்கிறார் லாரா