கல்யாணத்துக்கு நாலே நாள் தான்.. மகளை சுட்டு கொலை செய்த தந்தை!!

12

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.

வேறு ஒருவரை காதலிப்பதாக தந்தை மகேஷ் கர்ஜாரியிடம் கூறியுள்ளார். ஆனால் மகேஷ் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தனு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் திருமணம் செய்வதற்கு தன்னை கட்டாயப்படுத்தி வருவதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் தந்தையும் பிற உறவினர்களும் தான் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகின்றனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விக்கி என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் தனுவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்களும் பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சி செய்தனர். அப்போது தனு வீட்டிற்கு செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.


மேலும் மகளிர் பாதுகாப்பு அமைப்பாளர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மகேஷ் தனியாக பேச வேண்டும் என கூறி மகளை அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது மகேஷ் தனுவை கொலை செய்தது தெரியவந்தது. திருமணத்திற்கு 4 நாட்கள் முன்பாக தந்தை மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.