கள்ளக்காதலி யாருக்கு என்பதில் தகராறு? – நண்பன் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நபர்!!

274

நாகையில்..

நாகை மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(55). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு டீக்கடையில், டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே, வியாழக்கிழமை கருவேலங்கடை மகா காளியம்மன் கோயில் முன்பாக கழுத்து அறுக்கப்பட்டு ரவிச்சந்தின் சடலமாக கிடந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனே அங்கு சென்ற போலீசார், சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர்.

மேலும் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் கிடைத்த தடயங்களை கைப்பற்றி, உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், ரவிச்சந்திரனின் கூட்டாளியான தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு தெருவைச் சேரந்த நடவண்டி மோகனை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.


சந்தேகத்தின்பேரில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரவிச்சந்திரனின் கொலைக்கான பின்னணி, வெட்ட வெளிச்சமானது. ரவிச்சந்திரனும், நடவண்டி மோகனும் ஒன்றாக ஊர் சுற்றி, சரக்கு பாட்டிலை பங்கு போட்டு வந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இருவருமே இந்த காதலை தொடர்ந்துள்ளனர். இறுதியில் அதுவே பிரச்னையாக வெடித்துள்ளது.

தான் அறிமுகப்படுத்தி வைத்த பெண்ணை, தனக்கே தெரியாமல் அபகரிக்க முயன்றதாக நடவண்டி மோகன் ஆத்திரப்பட, நண்பர்கள் எதிரிகளாக மாறினர். அவள் எனக்குத்தான், எனக்கு மட்டும்தான் எனக்கூறி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் கொடூர சிந்தனையுடன் யோசித்த நடவண்டி மோகன், ரவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது நண்பன் ஞானபிராகசத்துடன் கைக்கோர்த்து கொலை திட்டம் போட்டவர்,

ரவிச்சந்திரனை திட்டமிட்டப்படி தீர்த்துக்கட்டியுள்ளனர். விசாரணையில் உண்மை தெரியவர, நடவண்டி மோகனையும், கொலை செய்ய அவருக்கு உடந்தையாக இருந்த ஞானபிராகசத்தையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்குபதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலியோடு யார் வாழ்வது? என்ற போட்டியில் கோயில் வாசலில் கூட்டாளியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நாகை மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.