காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண் … சற்றும் எதிர்பாராதபோது செய்த நடுங்கவைக்கும் செயல்!!

549

டெனிஸ் ஷாபிசினஸ்..

கடந்த பிப்ரவரி மாதம் டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸ் (Taylor Denise Schabusiness) என்கிற 25 வயது பெண் தம்முடைய காதலன் என சொல்லப்படும் ஷாட் தைரியன் (Shad Thyrion) என்பவருடன் உறவில் இருந்து, பிறகு அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரீன்வேட் குரூப் லைன் பகுதியில் வசிக்கும் ஷாட் தைரியனின் தாய், தமது வீட்டில் தன்னுடைய மகன் ஷாட் தைரியன் இறந்தநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு போன் செய்து தகவல்களை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாட் தைரியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் இது தொடர்பான விசாரணையை போலீஸார் தீவிர படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஷாட் தைரியனுடன் சம்பவத்தன்று டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸ் என்கிற இளம் பெண் உறவில் இருந்ததாக கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் அப்பெண்ணின் வேனில் சில சமையல் பாத்திரங்களை கண்டுபிடித்து இருக்கின்றனர். அந்த பாத்திரங்களில் தன் காதலனை கொன்றதற்கான தடயங்களை கண்டுள்ள போலீஸார் அப்பெண்ணை கொலை செய்தல்,

சடலத்தை சிதைத்தல் மற்றும் மூன்றாம் நிலை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முதல் நிலை அறிக்கைகளை பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை மார்ச் 6, 2023 இல் தொடங்கும் என்று ஒரு பக்கம் தகவல்கள் குறிப்பிட,

இன்னொரு பக்கம் வழக்கறிஞர், Quinn Jolly என்பவர், ஷாபிசினஸ் பைபோலார் டிஸார்டர் எனும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அதனால் அவர் விசாரணைக்கு ஏற்ற மனநிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.