காதலனுடன் மகளை பார்த்த அம்மா : கடுப்பாகி கொலை செய்த கொடூரம்.. தற்கொலை என நாடகம்!!

266

ஆத்திரத்தில் மகளை கொலை செய்த தாய், அதன்பிறகு செய்வதறியாமல் மகள் தற்கொலை செய்ததாக நாடகமாடி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை என்ற கோணத்தில் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் இப்ராஹிம்பட்டினத்திலேயே இந்த கொடூர செயல் நடந்திருக்கிறது. தான் பார்த்த மாப்பிள்ளையை மணக்கமறுத்த மகள் வேறொருவரை காதலிப்பதை அறிந்ததும் ஆத்திரப்பட்ட தாய் அவரை கொலை செய்திருக்கிறார். கொலை செய்தது மட்டுமல்லாது அதனை மறைக்க மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் நாடகமாடியிருக்கிறார்.

தில்சுக்நகர் என்கிற பகுதியில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார் கொலை செய்யப்பட்ட 19 வயது பார்கவி. பார்கவியின் இறப்பு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அனைத்து விதங்களிலும் இந்த சம்பவத்தை விசாரிக்கவிருப்பதாகவும் டெபுட்டி கமிஷனர் சுனிதா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை ஜங்கம்மா அவருடைய 17 வயது மகனுடன் வயல்வெளிக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது மகள் பார்கவி வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார். மதியம் 1 மணியளவில் ஜங்கமா வீட்டிற்கு வந்து பார்க்கையில் பார்கவி அவரது காதலருடன் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த ஜங்கம்மா பார்கவியை திட்டி அடித்து துன்புறுத்தி இருக்கிறார். ஜங்கம்மாவை பார்த்து பயந்துபோன பார்கவியின் காதலர் அவரது சகோதரத்தை அழைத்து வந்தார்.

விரைந்து வந்த அண்ணன் தம்பி பார்கவியை காப்பாற்ற நினைக்கும் போது வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருக்க, வீட்டின் ஜன்னல் மூலம் ஜங்கம்மாவை அழைத்தார்கள். சிறிது நேரத்திற்கு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. அதன்பிறகு வெளியே வந்த ஜங்கம்மா, பார்கவி புடவையை கழுத்தில் நெறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை கேட்ட பார்கவியின் காதலரும் அவருடைய அண்ணனும் விரைந்து சென்று உறவினர்களையும் மருத்துவரையும் அழைத்து வந்தனர். பார்கவியின் உடலை சோதித்த மருத்துவர், அவர் இறந்ததாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இப்ராஹிம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.


மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரனையில் ஜங்கம்மா பார்கவியை அவரது நெருங்கிய உறவினர் ஒருவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் பார்கவி தன் காதலனைதான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் காதலருடன் பார்கவியை பார்த்து ஆத்திரமடைந்த ஜங்கம்மா கோபத்தில் அவரை கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பார்கவியின் தந்தை ஐலயா, பேசுகையில் மகள் பார்கவி வீட்டில் தனியாக இருந்தபோது அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதனைப் பார்த்து ஜங்கமாகவும் மயக்கம் அடைந்ததாகவும் சமாளித்திருக்கிறார். இவர்கள் இருவரையும் இப்படி பார்த்து பயந்துபோன பையன் மாற்றி பேசுவதாகவும் கூறினார்.

மிகவும் வினோதமாகவும் குழப்பமாகவும் இருக்கும் இந்த விவகாரம் தற்போது ஐதராபாத்தில் பயங்கரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த வழக்கு விசாரணையை இப்ராஹிம் பட்டினம் போலீசார் தீவிரபடுத்தி இருக்கிறார்கள்.