சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கோவில் திருவிழாவின் போது சூர்யா (19) என்பவர் அறிமுகமாகியுள்ளார். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் தகவல் பரிமாறி வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடைக்கு சென்றுவிட்டு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு இரவு 8 மணியளவில் காதலன் சூர்யாவை சந்திக்க வந்துள்ளார். அப்போது சூர்யா நைசாக பேசி காட்டு பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். கடைக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து காலையில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரிடம் பெற்றோர் விசாரித்த போது காதலன் சூர்யா வலுக்காட்டாயமாக மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தததாகவும், அத்துடன் தனது நண்பர்களையும் வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சூர்யா, நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த சிலர், சூர்யா, நிஷாந்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சூர்யா, நிஷாந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த வினோத்குமார் (20), வேலு (20) உள்பட மேலும் 3 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.