கோவா..
கோவாவுக்கு கோடை காலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல், தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள், காதலர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், கோவாவில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே பிரிட்டிஷ் பெண் ஒருவர், முன்னாள் நூலகர் ஒருவரால் தனது காதலன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடுத்தர வயது பெண் அளித்த புகாரின் படி, கடற்கரை அருகே ஸ்வீட் வாட்டர் ஏரியின் அருகே படுத்திருந்த போது, மசாஜ் செய்வதாக கூறி அப்பெண்ணை அழைத்து சென்று, அவரது காதலனை மிரட்டி, அவரது கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஜூன் 2ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் உதவியை நாடிய பின்னர் திங்கள்கிழமை அந்த பெண் பெர்ன்ஹாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பெர்ன்ஹாம் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியான முன்னாள் நூலகர் வின்சென்ட் டிசோசா கைது செய்ததாக கூறப்படுகிறது.