காதலியின் வீடியோவை வைத்து மிரட்டியதால் ஆத்திரம்.. இளைஞரை சிறுமியின் தந்தையே ஸ்கெட்ச் போட்டு கொன்ற கொடூரம்!!

258

திருப்பூரில் காதல் என்ற பெயரில் சிறுமியுடன் பழகி, அவரின் தந்தையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு நம்பிக்கை துரோகம் செய்த இளைஞரை, அவரின் நண்பர் மூலமே நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இளைஞரின் விபரீத விளையாட்டு அவருகே வினையாகியுள்ளது… நடந்தது என்ன?

திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேட் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பது தெரியவந்தது.