காதலியை பார்க்க பர்தா அணிந்து வந்த இளைஞர்… இறுதியில் நேர்ந்த சோகம்!!

271

உத்தரபிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக பர்தா அணிந்து பெண்ணாக சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை பிடித்து மக்கள் அடித்து உதைத்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் சந்த் புரா என்ற இளைஞர் பர்தா அணிந்து காதலியை பார்க்க சென்றார்.

காதலி வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள சந்துப் பகுதியில் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்தனர்.

குழந்தை கடத்தல்காரனா அல்லது திருடனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட மக்கள், சந்திடம் அவரது பர்தாவை கழற்றி ஆதார் அட்டையை காட்டும்படி கேட்டனர்.

சந்தின் பர்தா கழற்றப்பட்டதும், அருகில் இருந்தவர்கள், அவர் ஆண் என்பதை உணர்ந்து, அவரை தீவிரமாக தாக்கினர். அப்போது சந்த் சிறிய துப்பாக்கியை கையில் வைத்திருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, மக்கள் சந்தை அடிக்கத் தொடங்கி, உடனடியாக போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் சந்தை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.