கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுக்காக கூலிப்படையை ஏவி காதல் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஹர்ஷிதாவிற்கு இன்ஸ்டாகிராமில் குண்டா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், கணவர் உயிருடன் இருக்கும் வரை நாம் சேர்ந்து வாழ முடியாது என்பதால் அவரை கொலை செய்ய ஹர்ஷிதா திட்டமிட்டார்.
அதன்படி பிரகாஷை தனியாக அழைத்து சென்ற ஹர்ஷிதா கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையை ஏவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி ஹர்ஷிதாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
இன்ஸ்டாகிராம் காதலனுக்காக கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹர்ஷிதா, சோமசேகர், ரங்கஸ்வாமய்யா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான குண்டாவை தேடி வருகின்றனர்.