காதல் திருமணம் பெற்றோரும் எதிர்ப்பில்லை 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தூக்கில் தொங்கிய கொடுமை!!

187

காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள். ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து வந்த சந்தோஷம், திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே இல்லை என்கிறார்கள்.

தொடர்ந்து கணவன், மனைவிக்குள் சண்டை நீடித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருமஞ்சிறையை சேர்ந்த முத்துக்குமாருக்கும் சந்திராவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தற்போது சந்திரா திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் படிக்கிறார். அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி தகராறு ஏற்பட்டு சந்திரா ஊத்துக்குளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கணவர் முத்துக்குமார் தனது மனைவி சந்திராவை கருமஞ்சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தார்.


இந்நிலையில், திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாததால், அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குன்னத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.