காது துளையின்றி பிறந்த குழந்தை : மகளின் சிகிச்சைக்காக 10 ஆண்டுகள் போராடிய பெற்றோர்!!

519

கேரளாவில்..

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் மற்றும் சங்கிதா ஆகிய தம்பதிகளுக்கு, அக்‌ஷிதா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

குழந்தை பிறந்தது முதலே காது துளையில்லாமல் இறந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அக்‌ஷிதாவின் பெற்றோர் தொடர்ந்து பல மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்.

தற்போது 10 வயதை நெருங்கிய அக்‌ஷிதாவிற்கு, கடந்த 10 ஆண்டுகளாக முயன்றும், அறுவை சிகிச்சை செய்ய முடியாதென மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ராணுவ பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ராஜீவ், தமிழகத்திலுள்ள வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை செய்தால் முகத்தில் நரம்பியல் பிரச்சனை வர வாய்ப்பிருக்கதாக கூறி, 10 சதவீதம் காது கேட்கும்படி அறுவை சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.


ஆனால் அக்‌ஷிதாவின் பெற்றோர் தொடர்ந்து சிகிச்சைக்காக போராடி BAHA(Bone-Anchored Hearing Aid) என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம், சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதால், அவர் ராணுவத்திலிருந்த மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்.

ஆனால் இவ்வளவு பெரிய செலவில் சிகிச்சைக்கு உதவ முடியாதென ராணுவ மருத்துவ காப்பீட்டு மையம் தெரிவித்துள்ளது. ராணுவ மருத்துவ உதவி கிடைக்காததால் மனமுடைந்து போன ராஜீவ் , அரசு பணியிலுள்ள தனது மனைவியின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கான இயந்திரமே 7 லட்சத்திற்கும் மேல் இருந்ததோடு, மேற்கொண்டு 5 லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து மகளுக்கு கேட்கும் திறனை பெற்றுள்ளனர்.

BAHAஎன்ற இந்த சிறப்பு அறுவை சிகிச்சை இந்தியாவில், சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் பிறவியிலே காது துளையில்லாத குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் மிசினை பொருத்தும் முறை ஆகும்.

இம்முறையில் தோலுக்கு உள்ளே இந்த கருவிகள் பொருத்தப்படுவதால், வெளியே பார்வைக்கு தெரியாது என்பதோடு, கேட்கும் திறனும் துல்லியமாக இருக்குமென, திருச்சூர் மிஷின் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ராணுவத்துறையில் பணியாற்ற ராஜீவிற்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், எழுந்த சர்ச்சையை அடுத்து கடைசியாக சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.