கால்வாயில் குளிக்க சென்றபோது விபரீதம்.. தவறி விழுந்த சகோதரர்களில் ஒருவர் பலியான சோகம்!!

51

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசிப்பவர் கணேசன். இவரது மூன்று மகன்கள் லோகேஷ் (24), இரட்டை சகோதரர்கள் விக்ரம் (23),

சூர்யா (23) ஆகியோர் நேற்று மாலை, பக்கிங்காம் கால்வாயில், முகத்துவாரப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அண்ணன் லோகேஷ் பக்கிங்ஹாம் கால்வாயில் தவறி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற இரு சகோதரர்களும் தங்கள் சகோதரனை காப்பாற்ற பக்கிங்ஹாம் கால்வாயில் ஒருவர் பின் ஒருவராக குதித்தனர். இதில் சகோதரர்கள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர்.

அங்கு வந்து பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பல மணி நேரம் நடந்த தேடுதலுக்குப் பிறகு, மூவரிடமிருந்தும் லோகேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 2 பேரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.