கின்னஸ் சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்.. உலகையே திரும்பி பாக்க வெச்ச சம்பவம் : வைரல் வீடியோ!!

398

இரட்டை சகோதரிகள்..

இரட்டையர்களாக இருந்து வரும் இரண்டு சகோதரிகள் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்தியும் அதன் பின்னால் உள்ள காரணமும் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்கள் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும்.

ஆனால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு சில விஷயங்கள் வித்தியாசமாக இருப்பது தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.


ஜப்பான் நாட்டின் ஒகாயாமா என்னும் நகரத்தைச் சேர்ந்தவர் யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி. இரட்டை சகோதரிகளான இவர்கள், கடந்த 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்துள்ளனர்.

இரட்டையர்களாக இருந்த போதிலும் இவர்கள் இருவருக்கிடையே உயர வித்தியாசங்கள் உள்ளது. அதன்படி அவர்கள் இருவருக்கும் இடையே இரண்டு அடி மற்றும் 5.5 அங்குலம் வரை உயர வித்தியாசத்தை கொண்டுள்ளனர்.

இதில் யோஷி என்பவர் சுமார் 162.5 சென்டிமீட்டர் உயரமும் (5 அடி 4 அங்குலம்), மிச்சி என்பவர் 87.5 சென்டிமீட்டர் உயரமும் (2 அடி 10.5 அங்குலமும்) கொண்டுள்ளனர். இதன் காரணமாக உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட மகளிர் இரட்டையர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

யோஷி மற்றும் மிச்சி ஆகிய இருவரின் உயரம், தகுதி வாய்ந்த மருத்துவர்கள் குழுவைக் கொண்டு காலை, மதியம், மாலை என உணவுக்கு பிறகு அளக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர் தான் அவர்கள் கின்னஸுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், யோஷி மற்றும் மிச்சி ஆகியோரின் சாதனை அதிகாரப்பூர்வமாகவும் கின்னஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மிச்சி தற்போது பெற்றோர்களுடன் வசித்து வரும் சூழலில் யோஷி திருமணம் ஆகி தனது கணவருடனும் வசித்து வருகிறார். தான் உயரம் குறைவாக இருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள மிச்சி, “கடந்த 2012 ஆம் ஆண்டு,

உலகின் மிகவும் குட்டையான மனிதர் ஒருவரை பற்றி வரலாறு படித்தேன். அது மனதை கலங்கச் செய்தது. ஆனால் அதே வேளையில் அவரது குணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது ஒரு புறம் என்றாலும், நான் என் உயரம் குறித்து கவலைப்படுகிறேன்” என்றும் கூறி உள்ளார்.