கிறிஸ்தவ தேவாலயத்தில் பேய்…. வெளியே போ என சத்தமிட்ட ஆத்மா : அதிரவைத்த உண்மைச் சம்பவம்!!

515

பிரித்தானியாவில்…

பழங்கால பிரித்தானிய ஆலயம் ஒன்றிற்குள் நுழைந்த ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு, வெளியே போ என ஆவி ஒன்று சத்தமிடும் திகில் அனுபவம் ஒன்று கிடைத்தது.

ஆவி வேட்டையாடும் Andy Pollard என்னும் யார்க்‌ஷையரைச் சேர்ந்த நபர், லீட்ஸிலுள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால துறவிகள் மடத்துக்குச் சென்றுள்ளார்.

வெளிச்சம் நன்றாக இருக்கும் மதிய நேரத்தில், ஆவிகள் நடமாட்டத்தை உணரும் கருவிகளுடன் அந்த மடத்தில் உலாவிக்கொண்டிருந்திருக்கிறார் Andy.


அப்போது, அங்கிருந்த பயன்பாட்டில் இல்லாத சிற்றாலயம் ஒன்றிற்குள் நுழைந்திருக்கிறார் Andy. அதற்குள் நுழைந்ததும், அவரது கருவி, அங்கு ஆவிகள் நடமாட்டம் பலமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அங்கு நடப்பவை முழுவதையும் பதிவு செய்துகொண்ட Andy, பின்னர் அவற்றை இயக்கிப்பார்க்க, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஆம், ஒரு ஆடியோ பதிவில்,

வெளியே போ என யாரோ சத்தமிடுவது பதிவாகியுள்ளது. ஆகவே, இன்னொருமுறை சென்று அந்த கட்டிடத்தை ஆராய்வது என முடிவு செய்துள்ளார் Andy.

1152 முதல், 1538ஆம் ஆண்டு வரை துறவிகள் மடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தைரியம் உள்ளவர்கள் இப்போதும் அந்த மடத்தைச் சென்று பார்க்கலாம்!