குனிந்து நிலத்தை தொட முடியாத தொப்பையை வேகமாக கரைக்கலாம்! எப்படி தெரியுமா?

439

திராட்சை……..

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய விட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக விட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.

அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.

யாருக்கு தான் திராட்சை பிடிக்காது? திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

ஆனால் பலருக்கும் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


திராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம். இந்த குப்பையில் உள்ள ஒரு பொருள் உடல் எடை குறைக்க உதவி புரியும்.

எடை குறைவை ஊக்குவிக்கும்
திராட்சை விதைகளினால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும்.

திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை மாயமாக மறைந்து விடும். திராட்சை விதையை சாப்பிட்டால், அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை வேகமாக குறையும்.