குழந்தை பெற்றதாக கூறப்பட்ட 13 வயது சிறுமி மீண்டும் பெரிய வயிறுடன் இருக்கும் புகைப்படம்! நடந்தது என்ன? ஏற்பட்ட அதிரடி திருப்பம்!!

933

ரஷ்யாவில் 13 வயதில் கர்ப்பமான சிறுமிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார். Darya (13) என்ற சிறுமியும் Ivan (10) என்ற சிறுவனும் காதலித்த நிலையில் சிறுவனால் தான் கர்ப்பமானதாக Darya அறிவித்தார்.

பின்னர் தனது வயிற்றில் வளரும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும், உயரமாகவும் இருப்பவர் எனவும் அவருக்கு குறைந்தது 16 வயது இருக்கும் எனவும் Darya கடந்த மே மாதம் கூறினார். தன்னை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்ததாலேயே கர்ப்பமானதாகவும் கூறினார்.

குழந்தை பிறந்த பின்னர் அந்த நபரை பொலிசார் கைது செய்வார்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் 121,000 பாலோவர்ஸ் கொண்ட Darya இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் குழந்தையை தன் மீது Darya சாய்த்து வைத்திருப்பது போன்ற புகைப்படமும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் தனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என Darya அதிரடியாக தெரிவித்துள்ளார். அதாவது தனது 263,000 பாலோவர்ஸ் கொண்ட பக்கத்தில் தான் இதை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், எனக்கு குழந்தை பிறந்துவிட்டது என கூறப்பட்ட தகவல் பொய்யாகும். என் பெயரில் இன்ஸ்டாகிராமில் உள்ள போலி கணக்கில் தான் இந்த பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளது.

என்னை வெறுப்பவர்கள் தான் இது போன்ற பொய் செய்தியை வெளியிடுகின்றனர். ஓன்லைனில் என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகின்றது. நான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும், அது 2015ல் எடுக்கப்பட்டது.

நான் என் காதலன் Ivan உடன் தபால் நிலையத்துக்கு சென்ற போது, என் நண்பர் என்னை பார்த்து என்ன உன் வயிறு இன்னும் பெரிதாக உள்ளது? நீ குழந்தை பெற்றுவிட்டதாக செய்தி பார்த்தேனே என கூற எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதோடு தான் இன்னும் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தெரிவிக்கும் வகையில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். Darya-க்கு ஆகஸ்ட் – செப்டம்பரில் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியதாக முன்னர் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.