கொடூரமாக நடந்த ஆணவக் கொலை : துடி துடித்து பலியான காதல் ஜோடி : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

117

கோவை காதல் ஜோடி கொலை வழக்கில் காதலனின் அண்ணனை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி.

அவரது மகன்கள் வினோத்குமார் (27) மற்றும் கனகராஜ் (23). அவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களில், கனகராஜ் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இது அவரது சகோதரர் வினோத்குமாருக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மீதான காதலை கைவிடுமாறு தனது தம்பியை எச்சரித்து மிரட்டினார்.

ஆனால், அவர் தனது காதலை கைவிடவில்லை. இந்த சூழ்நிலையில், ஜூன் 25, 2019 அன்று, காதல் ஜோடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வினோத்குமார்,

அவர்களைச் சுற்றி வளைத்து, அரிவாளால் இருவரையும் வெட்டிக் கொன்றார். இதில், கனகராஜ் இறந்தார். வர்ஷினி பிரியா ஜூன் 29 அன்று கோவை அரசு மருத்துவமனையில் இறந்தார்.

இந்த இரட்டைக் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், வினோத்குமார் மேட்டுப்பாளையம் போலீசில் சரணடைந்தார்.


இந்த வழக்கில், மேட்டுப்பாளையம் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகளான கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை எஸ்சி-எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வினோத்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,

அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அவர் மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளார் என நீதிபதி விவேகானந்தன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

மற்ற 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வினோத்குமாருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் 29 ஆம் தேதி (புதன்கிழமை) விவாதிப்பார்கள் என்றும் நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரங்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.