கொரோனாவுடன் கேரளாவை உலுக்கும் பெருவெள்ளம், நிலச்சரிவு: ஒரே பகுதியில் கொத்தாக மண்ணுக்குள் புதைந்த 85 பேர்!!

348

இந்திய மாநிலம் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதுடன், மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ள அபாயம் உலுக்கியுள்ளது.

மூணார் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கான சமூக இல்லங்களில் குடியிருந்த சுமார் 85 பேர் கொத்தாக நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக 5 சமூக இல்லங்கள் நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 85 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

கேரளா முழுவதும் ஆகஸ்டு 9 ஆம் திகதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.