அமெரிக்கா..
பெரும்பாலும் பல பிரபலங்கள் தனது உடலை அழகாக காட்டிக் கொள்ள தான் நினைப்பார்கள்.
அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிக்கா புர்கோ என்ற மொடல் அழகி தனது உதட்டை சத்திர சிகிச்சை மூலம் பெரிதாக்கியுள்ளார்.
இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்துள்ளார். திடிரென்று ஒரு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு லிப் பில்லர் வந்துள்ளது.
அதை இலவசமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். புதிதாக நடந்த சத்திர சிகிச்சை டாக்டர் லிப் பில்லரை ஜெசிகாவுக்கு செலுத்தி உள்ளார்.
அதை செலுத்தி ஒரு சில வினாடிகளில் உதடுகள் வீங்கத் தொடங்கி அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசிகா தனது சோகத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
யாராவது, இலவசம் தருகிறேன் என கூறினால் தயவு செய்து அதை நம்பி யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.