சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாருக்கு சிறையில் தனி அறை: கைதிகள் நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு…!

421

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கு மதுரை மத்திய சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் படுகொலை தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மாவட்ட சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.

மேலும் சிறை கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.