சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் : சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு கூலாக பெற்றோருக்கு போன் செய்த கொடூரன்!!

143

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த நாகபந்தல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி தனது பாட்டியுடன் ஆண்டிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுபாஷ் சினிமா பாணியில் அங்கிருந்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்டுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்களை தொடர்பு கொண்ட சுபாஷ், உங்கள் மகளை நான் தான் கடத்திச் சென்றுள்ளேன். மேலும் அவளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டேன்.

அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால் சுபாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பாட்டியுடன் மருத்துவமனைக்குச் சென்ற சிறுமியை இளைஞர் சினிமா பாணியில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.