சீனாவின் உலக புகழ்பெற்ற வர்த்தகர் அலிபாபா நிறுவனர் காணாமல் போயுள்ளார்!!

632

அலிபாபா நிறுவனர்..

உலக புகழ்பெற்ற செல்வந்தரின் ANT கூட்டு நிறுவனம் தொடர்பாக சீன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த கூட்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜெக் மா காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகிரங்கமாக வெளியில் தென்படவில்லை. அலிபாபா மற்றும் ANT ஆகிய கூட்டு நிறுவனங்களுக்கு சீனா அரசாங்கம் வழங்கி வந்த நிதி உட்பட பல சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஜெக் மா பகிரங்கமாக எங்கும் வெளியில் வருவதில்லை என கூறப்படுகிறது. அத்துடன் அவரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.


சீன அரசாங்கம் ஜெக் மாவின் வர்த்தகம் தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெக் மா சில சந்தர்ப்பங்களில் சீன அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜெக் மாவுக்கு சீன அரசின் பொருளாதார நிர்வாக முறை தொடர்பில் ஒரு மோதலான நிலைமை இருந்து வந்ததாகவும் பேசப்படுகிறது.

சீன அரசாங்கம், ஜெக் மாவுக்கு சொந்தமான அனைத்து வர்த்தகங்களின் நிதி நடைமுறைகளையும் கடும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.