சீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா: விரைவில் ஜப்பானுடன் ராணுவ தளவாட ஒப்பந்தம்!!

1063

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தைகளைக் கட்டுப்படுத்த, இந்தியா,ஜப்பானுடன் ஒரு ராணுவ தளவாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மிக சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாவது முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய ஒப்பந்தங்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் செயல்பாட்டு வரம்பை அதிகரிக்கும்.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புப் பயிற்சிகள் மூலம் இராணுவங்களுக்கு இடையிலான செயல்பாட்டை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாட்டில் இந்தியா நேற்று ஆஸ்திரேலியாவுடன் ஒரு லாஜிஸ்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் இந்திய போர்க்கப்பல்களுக்கு ஆஸ்திரேலிய கடற்படை மூலம் எரிபொருள் நிரப்பவும், ஆஸ்திரேலிய கடற்படை தளங்களில் நிறுத்தி வைக்கவும், பராமரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகளைப் பெறவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.

இதே போல் 2016’ஆம் ஆண்டில், அமெரிக்காவுடன் ஒரு தளவாட பரிமாற்ற ஒப்பந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இது எரிபொருள் நிரப்பும் வசதிகள் மற்றும் டிஜிபோட்டி, குவாம் டியாகோ கார்சியா மற்றும் சுபிக் பே ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்களை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.