சுவிஸில் விமான விபத்தில் சிக்கி பலியான நால்வர்: வெளியான முழுமையான தகவல்!!

836

சுவிட்சர்லாந்தின் வலாய்ஸில் சனிக்கிழமை ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டு சுவிஸ் மற்றும் இரண்டு ஆஸ்திரியர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

வலாய்ஸில் Lötschental பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் அந்த குட்டி விமானம் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

வலாய்ஸ் மண்டல பொலிசார் சனிக்கிழமை அறிவித்தபடி, பனிப்பாறை நுனி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


உள்ளூர் நேரப்படி 12.35 மணிக்கு பொலிசாருக்கு குறித்த விபத்து தொடர்பில் பொதுமக்களில் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சில நிமிடங்களுக்கு பின்னர், அதே நபர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார், விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் புகைமூட்டமாக உள்ளது என. உடனடியாக துரிதமாக செயல்பட்ட Lötschental பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், ஹெலிகொப்டர் உதவியுடன் சம்பவப்பகுதிக்கு சென்று சேர்ந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள சுவிஸ் பயணிகள் இருவருக்கும் 66 மற்றும் 50 வயது எனவும், ஆஸ்திரியர்களுக்கு 50 மற்றும் 46 வயது என தெரியவந்துள்ளது. தற்போது விமானத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மண்டல பொலிசாரால் விபத்துக்கான காரணத்தை தெளிவுபடுத்துவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.