செலவுக்கு பணம் இல்லை …மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த மருமகன்!!

104

குடிப்பதற்கு பணம் தராததால், மாமியார் தலையில் கல்லைப் போட்டு கொலைச் செய்திருக்கிறார் மருமகன். கணவனையும், குழந்தைகளையும் விட்டு விட்டு மகள் வீட்டை விட்டு கொளுந்தனாருடன் ஓடிய நிலையில், பேரக் குழந்தைகளுக்காக செலவுக்கு பணம் கொடுத்து காப்பாற்றி வந்த சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் வேணுகோபால்(65). இவருடைய மனைவி சிவபூஷணம்(60). இவர்களுக்கு 3 ஆண் மகன்கள், ஒரு மகள் சசிகலா. சசிகலா கடந்த 10 வருடங்களுக்கு முன்பே ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரும் தனியே வசித்து வந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமகிருஷ்ணனையும், குழந்தைகளையும் விட்டு விட்டு சசிகலா, ராமகிருஷ்ணனின் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்த ராமகிருஷ்ணன், மாமியார் சிவபூஷணத்திற்கு வரும் பென்ஷன் பணத்தை வாங்கிக் கொண்டு, போதைக்கு அடிமையாகி தினமும் மதுபானம் அருந்தி வந்தார்.


சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு மாமியார் தராததால் அவருடைய தலையில் கல்லை போட்டு ராமகிருஷ்ணன் கொலை செய்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மாமியாரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.