செல்லப்பிராணிக்கு 16.5 லட்சத்தில் சொகுசு வீடு.. பிறந்த நாள் பரிசு வழங்கிய யூடியூப் பிரபலம்!!

741

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் யூடியூப் பிரபலமான ப்ரெண்ட் ரிவேரா என்ற நபர் ஒருவர் செல்லப்பிராணிகள் மீது அதிக பிரியம் கொண்ட நபராக இருந்துள்ளார். இவர் பேக்கர் என்ற வளர்ப்பு நாயை மிகுந்த பிரியத்துடன் வளர்த்து வந்துள்ளார்,

ஆனால் அவரது வளர்ப்பு நாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து அவர் அடுத்ததாக சார்லி என்ற மற்றொரு நாயை செல்லப் பிராணியாக வளர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் ப்ரெண்ட் ரிவேரா என்பவரின் செல்லப்பிராணி சார்லிக்கு பிறந்தநாள் வந்துள்ளது.

அதை முன்னிட்டு தனது செல்லப்பிராணி சார்லிக்கு பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்க ப்ரெண்ட் ரிவேரா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார், இறுதியில் தனது செல்லப்பிராணி சார்லிக்கு தனது வீட்டிற்கு அருகே 16.5 லட்சத்தில் சொகுசு வீடு ஒன்றை ப்ரெண்ட் ரிவேரா கட்டியுள்ளார்.


இந்த வீட்டில் டிவி, சோபா, மெத்தை, தலையணைகள் மற்றும் பிரிட்ஜ் போன்ற அனைத்து வசதிகளும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டிற்கு சார்லி வீடு என்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.