நார்தாம்ப்டன்ஷயர்..
தனது பிள்ளைகள் இருவரையும் அந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும், அவரது மனைவி மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நார்தாம்ப்டன்ஷயர் பகுதியில் உள்ள கெட்டரிங்கில் குடியிருப்பு ஒன்றில் டிசம்பர் 15ம் திகதி ஜீவா சஜு(6), ஜான்வி சஜு(4) ஆகியோருடன் இவர்களின் தாயாரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், உடற்கூராய்வுக்கு பின்னர் வெளியான அறிக்கையில், குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் அஞ்சு அசோக் மூச்சுத்திணறலால் இறந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள சஜு மீது சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் நார்தாம்ப்டன்ஷயர் பகுதி பொலிசார் மூன்று கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
இதனிடையே, நார்தாம்ப்டன்ஷயர் பகுதி நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில், மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதால் வழக்கை எதிர்வரும் ஜூலை 6ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, கைதாகியுள்ள சஜு மார்ச் 24ம் திகதி வரையில் விசாரணைக் கைதியாக சிரையில் இருப்பார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.