சொந்தக்கார பையனே பாலியல் தொல்லை தந்தான்… பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி!!

198

90 சதவிகித பெண் குழந்தைகள் தாங்கள் வளர்வதற்குள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினர் என்று பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ‘என்னோட சொந்தக்கார பையனே சின்ன வயசுல என்னைப் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லைத் தந்தான்.

சொந்தக்காரன் என்பதால என்னுடைய குடும்பத்துலேயேயும் யாரிடமும் அது பற்றி என்னால அப்ப்போ சொல்ல முடியாது. அவங்க பெற்றோர்களிடமும் இது குறித்து பேச தயங்கினேன்.

அதன் பிறகு அவனுக்கு கல்யாணமாகி, பொண்ணு பொறந்ததும் என்கிட்ட மன்னிச்சுடுன்னு மெசேஜ் அனுப்பினான்’ என்று தனது உறவினாராலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து மலையாள சீரியல் நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த் தனது சமீபத்திய பேட்டி பேசி அதிர வைத்திருக்கிறார்.

நூற்றில் 90 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்கின்றனர் என்பது நிதர்சன உண்மை எனக் கூறி, தான் எதிர்கொண்ட இந்த உண்மையை பொதுவில் போட்டு உடைத்திருக்கிறார் சின்னத்திரை நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயத்தைக் கூறியிருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, “என் வாழ்வில் இருள் நிறைந்த பகுதி அது.


என்னுடைய குழந்தைப் பருவத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இது நடந்தது. சம்பந்தப்பட்ட நபர் என் உறவினர் என்பதால் என் வீட்டில் கூட நான் இது குறித்து சொல்லவில்லை” என்றார்.

மேலும், ”குழந்தைகள் இதுபோன்ற விஷயங்களை சந்திக்கும்போது பயப்படாமல் எதிர்வினையாற்ற வேண்டும். எந்த வயதிலும் பெண்கள் தைரியமாக இதனை எதிர்கொள்ள வேண்டும். நமக்கு அந்த சக்தி உள்ளது. என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அந்த உறவினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்த பின்பு, என்னிடம் மன்னிப்பு கேட்டு அவன் மெசேஜ் செய்தான். நான் அவனை வாழ்த்தினேன். நான் நினைத்தால் இப்போதும் அவனை என் சொந்தங்கள் முன்னால் வெளிப்படுத்த முடியும்.

அந்த பயம் அவனுக்கு உண்டு. இப்போது அவனுக்கு மகள் பிறந்திருப்பதால் இந்த குற்றவுணர்ச்சி இன்னும் அதிகமாகி இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்நாள் முழுக்க இது அவனுக்குத் தொடரும் என்பதுதான் அவனுக்கான தண்டனை” என்றார்.