மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன். அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.
இந்த பையனுக்கு 10 வயது. ஜெனிஃபர் 154 கிலோ எடை கொண்டவர். இந்த நிலையில், தனது மகன் தனது பேச்சைக் கேட்காததால் ஜெனிஃபர் கோபமடைந்தார்.
இதனால் ஜெனிஃபர் சிறுவனின் மீது அமர்ந்தார். ஜெனிஃபர் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே சிறுவனின் மீது அமர்ந்தார்.
இதனால் மூச்சு விட முடியாமல் சிறுவன் இறந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது ஜெனிஃபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஜெனிஃபருக்கு இப்போது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், கோழி மிதித்து குஞ்சு இறக்காது என்ற பழமொழியும் உள்ளது. ஆனால் தாய் தன் மகனின் மீது அமர்ந்ததால் சிறுவன் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.