டான்ஸ் மாஸ்டராகும் நடிகை சாய் பல்லவி! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

918

லவ் ஸ்டோரி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சாய் பல்லவி நடனம் அமைக்க உள்ளார்.

பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சாய் பல்லவி.

தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா படத்தில் நாயகியாக நடித்திருந்த இவர் தற்போது அதே இயக்குநர் உடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்ட நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.


லவ் ஸ்டோரி படத்தில் இன்னும் ஒரு பாடல் படமாக்க வேண்டியிருப்பதால், அந்தப் பாடலுக்கு சாய் பல்லவியை நடனம் அமைத்து தரும்படி இயக்குநர் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு தான் நடிக்கும் படங்களில் நடனத்தில் அசத்தும் சாய் பல்லவி, சேகர் கம்முலாவின் கோரிக்கையை ஏற்று லவ் ஸ்டோரி பட பாடலுக்கு நடனம் அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.