தனது சொத்தில் பாதியை தானம் செய்த தென் கொரிய தொழிலதிபர்! என்ன காரணம் தெரியுமா?

305

Kim Beom-su………..

தென் கொரியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மொத்த சொத்தில் பாதிக்கு மேலான பணத்தை சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Kim Beom-su தென் கொரியாவின் முன்னணி இணையதள மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான Kakao-வின் நிறுவனர் மற்றும் இயக்குநராவார்.

Kakao செயலியை தென் கொரியாவின் 90 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 11 பில்லியன் அமெரிக்க டொலர் லாபத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் தென் கொரியாவின் “biggest gainer” என்று Kim Beom-suவை Forbes நிறுவனம் அறிவித்தது.


இந்நிலையில், பில் கேட்ஸ் மற்றும் மிலிண்டா கேட்ஸ் முன்னெடுத்த ஒரு சர்வதேச தொண்டு அமைப்புக்கு தனது வாழ்நாளில் சம்பாத்தித்த சொத்துக்களின் மதிப்புள்ள பாதிக்கு மேலான பணத்தை தானம் செய்வதாக Kim Beom-su வாக்குறுதி அளித்துள்ளார்.

சுமார் 9.4 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்தை சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக Gates Foundationக்கு கொடுக்கவுள்ளார்.

உலகம் முழுவதும் இதுபோன்று 200க்கும் அதிமான பெரும்-பணக்காரர்கள் இந்த அமைப்புக்கு உதவி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.