தரையில என் கால் பட்டாலே மயக்கம் வந்துடும்.. 23 மணி நேரம் படுக்கையில் கழிக்கும் பெண் : வினோத காரணம்!!

5909

Bangor..

Maine அருகே அமைந்துள்ள Bangor என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson. 28 வயதாகும் இந்த பெண்ணுக்கு மிக அரிய வகை பிரச்சனை ஒன்று உள்ளது.

Postural Tachycardia என்னும் தொற்று மூலம் Lyndsa பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக அவர் உட்காரும் போதோ அல்லது நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில், அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், புவி ஈர்ப்பு (Gravity) மீதுள்ள அலர்ஜி காரணமாக தனக்கு இப்படி நிகழ்வதாகவும் Lyndsi குறிப்பிட்டுள்ளார். இது பற்றி பேசும் Lyndsi Johnson, “எனக்கு புவி ஈர்ப்பு என்றால் ஒருவித அலர்ஜி இருக்கிறது. இது கேட்பதற்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் அது தான் உண்மை. என்னால் மூன்று நிமிடத்திற்கு மேல் எழுந்து நிற்க முடியாது.


அப்படி நின்றால் மயக்கமோ அல்லது உடல்நிலை சரி இல்லாமலோ ஆகி விடும். நான் படுத்து கிடக்கும் போது மட்டும் தான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நாள் முழுவதும், அதாவது 23 மணி நேரம் வரை நான் படுக்கையில் தான் இருக்கிறேன்” என Lyndsi கூறி உள்ளார்.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு, கடற்படையில் Lyndsi பணிபுரிந்து வந்த போது அவருக்கு வயிற்று வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல, அவரது உடல்நிலை மோசமடைய ஆரம்பித்துள்ள நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்களும் என்ன தவறு நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், அவரது உடல்நிலை காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு, கடற்படையில் இருந்து Lyndsi விலக வேண்டிய கட்டாயம் உருவானது. ஆறு மாதங்கள் கழித்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் இருந்துள்ளது. ஆனாலும், Lyndsi-க்கு என்ன தவறு நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் கணிக்கத் தவறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இறுதியில், கடந்த பிப்ரவரி மாதம், Lyndsi-க்கு என்ன ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. ஒரு நாளைக்கு சுமார் 3 தடவை வரை அவர் மயக்கமடைவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கால் மேல் கால் போட்டு இருந்த நிலையில் தான், உணவு அருந்தவும் குளிக்கவும் அவரால் முடியும் என்றும் தெரிகிறது.

இது குணமடைய வாய்ப்பு அரிதான ஒன்றும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தரையில் கால் பட்டாலே, பெண்ணுக்கு மயக்கம் வந்து விடும் என்ற விஷயம், பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.